கனடாவில் போதைக்கு அடிமையாகி சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் மரணமடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவரின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கனடாவின் ஒன்ராரியோ என்ற பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் Jordan Sheard . இவர் அடிக்கடி போதைப்பொருள் உபயோகித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடலில் ஏதேனும் போதைப்பொருள் வைத்திருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்பும் சிறைக்கு செல்லும் முன்பும் காவல்துறையினர் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளனர்.
அதில் அவரிடம் எந்த போதை பொருளும் இல்லை என்று அறிந்த பிறகே அவரை சிறைக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சிறைக்கு சென்ற உடன் Jordan உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் Jordan அதிக அளவில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. எனவே அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் போதை பொருள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் பிரேத பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதால் தான் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையில் Jordanனின் குடலினுள் போதைப்பொருள் ஒன்று பிளாஸ்டிக் கவரில் இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த பிளாஸ்டிக் கவர் கிழிந்ததால் போதைபொருள் முழுவதும் அவரின் ரத்தத்தில் அதிகளவில் பரவியதால் உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் Jordan னின் தாய், “போதைப்பொருள் உள்ளதா? என்ற பரிசோதனைக்கு பிறகே அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார் எனில் போதைப்பொருள் உபயோகத்தினால் அவர் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் கூறப்பட்டுள்ளது. எனவே பரிசோதித்ததில் தவறு இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் என் மகன் உயிரிழந்தாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது குறித்து விசாரிக்குமாறு கோரியுள்ளார். ஆகவே அவரின் கோரிக்கை படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.