சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27- ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றில் இருந்து மீண்டதால் நாளை (31/01/2021) காலை 10.00 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவரின் உடல்நிலை சீராகவும், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிலும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் பெங்களூருவில் தங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் தமிழகம் திரும்புவார் என்றும் தகவல் கூறுகின்றன.