தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயார் என பிரேமலதா விஜயகாந்த் சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தங்கள் ஆட்சியை தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. ஆனால் இன்னும் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில் தேமுதிக தலைமை செயலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கூட்டணியில் உரிய மதிப்பு அளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயாராக இருக்க வேண்டும்” என்று சூளுரைத்துள்ளார்.மேலும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.