கல்லறையை சுத்தம் செய்யும் பணியாளருக்கு புதையல் கிடைத்தும் அவருக்கு அதில் பங்கு கொடுக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
ஜெர்மனியிலுள்ள Dinklage என்ற பகுதியில் இருக்கும் கல்லறையில் உள்ள வேர்கள் மற்றும் புதர்களை பணியாளர் ஒருவர் நீக்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் தங்க நாணயங்கள் மற்றும் பணங்கள் இருந்துள்ளது. இதனைக்கண்ட அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அடுத்த நாளும் தங்க நாணயங்கள் இருக்கும் கன்டெய்னர்கள் வேறு சில ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது.
மேலும் கிடைத்த மொத்த நாணயங்கள் மற்றும் பணங்களின் மதிப்பு 5,00,000 யூரோக்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஜெர்மன் சட்டத்தின் படி, புதையலின் உரிமையாளர் கண்டறியப்படவில்லை எனில் புதையலை கண்டுபிடித்தவருக்கு அதில் பாதி பங்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த புதையலை கண்டுபிடித்த பணியாளருக்கு பாதி பங்கு கொடுக்கவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2016 ஆம் வருடத்தில் தயாரிக்கப்பட்ட நாணயங்கள் தான் புதையலாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சமீபத்தில் மறைத்து வைக்கப்பட்டதாகத்தான் இருக்கும். எனவே அந்த நாணயங்கள் புதையல் இல்லை என்று கூறியுள்ளது. மேலும் இது காணாமல் போன பொருள் இல்லை. எனவே, அதனை கண்டறிந்தவருக்கு பாதியை அளிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அந்த நபர் ஏமாற்றம் அடைந்துவிட்டார்.