இன்றைய தலைமுறையினருக்கு வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கட்டாயம் கூறவேண்டும்.
பல வீடுகளில் வெல்லம் சாப்பிடும் பழக்கம் பாரம்பரியமாகத் தொடர்ந்து வருகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, புரதம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. வெல்லம் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள விஷயம்.
வெல்லம் மற்றும் வேர்க்கடலை உட்கொள்வதால் பல நன்மைகள் உண்டு. குளிர்கால நோய்களை தவிர்ப்பதற்கு இது உதவும்.
வெல்லம் மற்றும் எள்ளு சேர்த்து சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை தரும். பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
நெய் மற்றும் வெல்லம் சேர்த்த கலவையை சாப்பிட்டால் சருமத்திற்கு நல்ல பயன் கிடைக்கும். இதன் மூலம் பல நோய்களை தவிர்க்கலாம்.
வெந்தயம் மற்றும் வெல்லம் உட்கொள்ளும்போது முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது.