Categories
உலக செய்திகள்

4 வயது சிறுமி கண்டுபிடித்த…. 22 கோடி ஆண்டுகள் பழமையான…. டைனோசர் கால்தடம்…!!

4 வயது சிறுமி ஒருவர் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால்தடத்தை கண்டுபிடித்துள்ளார்.

பிரிட்டனிலுள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் குடும்பம் ஒன்று கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது டைனோசரின் கால்தடத்தை பார்த்த 4 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தந்தைக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அதை தன்னுடையசெல்போனில் புகைப்படம் எடுத்து தனது மனைவிக்கு எடுத்து அனுப்பியுள்ளார்.

இதையடுத்து அவருடைய மனைவி அந்த புகைப்படத்தினை நிபுணர்களுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் டைனோசர்கள் எப்படி நடந்தன? என்பதை நிரூபிப்பதற்காக இந்த கால்தடம் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது 22 கோடி ஆண்டுகள் பழமையானது என்று தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |