Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“பூக்களிலும் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளனவா”…? என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்..!!

பூக்கள் என்பது நாம் தலையில் சூடுவதற்கு மட்டும் அல்ல. கீரை வகைகளிலும் பல்வேறு பூக்கள் உள்ளது. ஒவ்வொரு பூக்களும் பலவித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அப்படி பட்ட பூக்களை குறித்து இதில் பார்ப்போம்.

பன்னீர் பூ – வாந்தி, நாக்கில் சுவையின்மை, தண்ணீர் தாகம் போன்றவற்றைத் தீர்க்கும்.

அகத்திப்பூ – புகைப்பிடிப்பதால் ஏற்படும் விஷ சூட்டையும், பித்தத்தையும் குறைக்கும். மேலும் வெயிலினால் உண்டாகும் சூட்டையும் தணிக்கும்.

முருங்கைப்பூ- பித்தம், வாந்தி குணமாகும். கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

செந்தாழம்பூ- தலைவலி, கபம், ஜலதோஷம், வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

Categories

Tech |