இயக்குநர் ஷங்கர் இயக்கி உருவான திரைப்படம் எந்திரன். இந்த படத்தின் கதைத் திருட்டு தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன்.இந்த படத்தின் கதை தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்ததாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீண்ட வருடமாக நடைபெற்று வந்த நிலையில், இயக்குநர் சங்கர் ஆஜராகாமல் இருந்து வந்தார். மேலும் தன் தரப்பு மனுவை தாக்கல் செய்யாமலும் இருந்து வந்தார். இந்நிலையில், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.