Categories
உலக செய்திகள்

“சானிடைசர்கள் குழந்தைகளின் கண்களை பாதிக்கும்”…. ஆய்வில் வெளியான தகவல்… கவனமா இருங்க..!!

கொரோனா காலத்தில், ஆல்கஹால் கலந்த சானிடைசா்களை அதிகம் பயன்படுத்துவதால் நமது குழந்தைகளின் கண்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கண் பிரச்சனைகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம். மேலும் 2019 ஆம் ஆண்டைவிடக் கடந்த ஆண்டு 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கக்கூடிய வேதிப்பொருட்கள்மூலம் அதிக அளவிலான கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகப் பிரான்ஸ் விஷ கட்டுப்பாட்டு மையம் கொடுத்த அறிக்கை தொிவிக்கிறது.

2019 ஆம் ஆண்டு வேதிப் பொருள்கள்மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கண் பிரச்சினைகளில் 1.3 விழுக்காடு சானிடைசா்கள் மூலம் ஏற்பட்டன. அதே நேரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு இதே விழுக்காடு 9.9 ஆக அதிகாித்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் ஒரே ஒரு தவழும் குழந்தைக்குத் தான் சானிடைசா் மூலம் கண்ணில் பிரச்சனை ஏற்பட்டது.

ஆனால் 2020 ஆண்டு 16 தவழும் குழந்தைகளுக்கு சானிடைசா் மூலம் கண்களில் பிரச்சினைகள் ஏற்பட்டதாக அந்த மையம் தொிவிக்கிறது. சானிடைசரை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சானிடைசா்கள் முக்கியமானவை என்றாலும், அவை குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்பது உண்மையே.

சானிடைசா்கள் பயன்படுத்துவைத் தொடர வேண்டும். அப்போது தான் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் அது குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்கும் வழிகள்:

நமது குழந்தைகள் மிகவும் சிறியவா்களாக இருந்தால், நாமே அவா்களுக்கு சானிடைசா்களைக் கொடுத்து நமது முன்பாகவே அவா்களுடைய கைகளைச் சுத்தம் செய்ய வைக்க வேண்டும்.

பொது இடங்களில் உள்ள இயந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் சானிடைசா்களை நமது மேற்பாா்வையில் மட்டுமே நமது குழந்தைகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

சானிடைசா்களை வைத்து நமது குழந்தைகள் கைகளைச் சுத்தம் செய்தபிறகு மீண்டும சுத்தம் செய்ய வைக்க வேண்டும்.

நமது குழந்தைகளுக்கு பாா்வை கோளாறுகள் இருந்தால், அவா்களை மூக்குக் கண்ணாடி அணியச் செய்ய வேண்டும். இதன் மூலம் அவா்களுடைய கண்களை சானிடைசா்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.

Categories

Tech |