Categories
உலக செய்திகள்

கொரோனாவிடமிருந்து காக்கும் தாய்மை… கருவில் நிகழும் அதிசயம்…!!!

கொரோனா எதிர்ப்பு சக்தி கர்ப்பக்காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு கிடைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி விரைவில் வந்து விடாதா என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் எடுத்தனர். உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

அதிலும் குறிப்பாக இந்தியா கண்டறிந்த தடுப்பூசி உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் கொரோனா அச்சத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. கொரோனா பாதிப்பில் இருந்து மீள பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க குழந்தை மருத்துவ வல்லுநர் டாக்டர் பிளானரி, ஆய்வில் புதிய தகவலை கண்டறிந்துள்ளார்.

அந்த ஆய்வில் கொரோனா எதிர்ப்பு சக்தி, பெரும்பாலும் கர்ப்பக்காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு கிடைப்பது தெரியவந்துள்ளது. தாய்க்கு கோவிட் பாதிப்பு இருந்தாலும் கருப்பையில் குழந்தைகளுக்கு சில பாதுகாப்பு கிடைக்கிறது என்பதை கண்டறிந்துள்ளார். இதிலிருந்தே தெரிகிறது தாய்மையின் முக்கியத்துவம்.

Categories

Tech |