தினமும் குளியல் போடும் நீங்கள் எந்த நீரில் குளித்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உலகில் உள்ள பெரும்பாலான மனிதர்கள் சாதாரண நீரில் குளிப்பதை விட வெந்நீரில் தான் அதிகமாக குளிக்கிறார்கள். ஆனால் அதில் இருக்கும் நன்மை தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. வெந்நீரில் குளிப்பதால் உடல் இதமாக இருக்கும் என்றும் உடல் சோர்வு தீர்ந்து விடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். உடம்பு வலி, உறக்கமின்மை என்றால் இரவு தூங்கும் முன்பு வெந்நீரில் குளித்தால் நல்லது. இதையும் தாண்டி வெந்நீரில் குளிப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும், கொழுப்பும் கரையும்.
குளிர்ந்த நீரில் குளிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. நரம்புகளை சுறுசுறுப்பாகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. சருமத்தை இருக்கிறது. குளிர் மற்றும் சளியை தடுக்கிறது. வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. வெந்நீரில் குளிப்பது களைப்பை போக்குகிறது. தலை வலியை குறைக்கிறது. தசைகளின் இறுக்கத்தை தளர்த்துகிறது. அதனால் வெந்நீரில் குளிப்பதை விட குளிர்ந்த நீரில் குளிப்பது தான் உடலுக்கு மிகவும் நல்லது.