Categories
அரசியல் மாநில செய்திகள்

சத்திரிய போராட்டத்திற்கு நானே தலைமை ஏற்பேன்… ராமதாஸ் அதிரடி…!!!

தமிழகத்தில் வன்னியர் தனி இட ஒதுக்கீடு கேட்டு சத்திரிய போராட்டத்திற்கு நானே தலைமையேற்று நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாமக சார்பாக தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு நடந்த ஆறு போராட்டங்களும் அபாரமானவை. தமிழகத்தில் வன்னிய தனி இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி. மிக பின்தங்கிய சமுதாயமாக இருக்கும் வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகஅரசு விரைவில் வன்னியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சத்திரிய போராட்டத்துக்கு தேவை இருக்காது. அதையும் மீறி போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், அந்தப் போராட்டத்தை நானே களம் இறங்கி தலைமை ஏற்று நடத்துவேன். அதற்காக காத்திருங்கள் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Categories

Tech |