ஆற்றில் பள்ளி மாணவி மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பத்தல அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்-காவிரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மணிகண்டன் மதியழகன் மற்றும் முத்துலட்சுமி என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். முத்துலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1௦ ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். கடந்த 28ஆம் தேதி காவிரியம்மாள் முத்துலட்சுமி மற்றும் அவரது தோழியான சஞ்சனா இருவரையும் அழைத்துக்கொண்டு நாகாவதி ஆற்றுக்குத் சென்றுள்ளார். அந்த ஆற்றில் கால்வாய் அமைப்பதற்காக ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டு உள்ளது.
இதை கவனிக்காமல் முத்துலட்சுமியும் சஞ்சனாவும் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென பள்ளத்திற்குள் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட காளியம்மாள் சத்தமிட்டால் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து ஆற்றில் இறங்கி சஞ்சனாவை உயிருடன் மீட்துள்ளனர். ஆனால் முத்துலட்சுமி பரிதாபமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பெரும்பாலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் சாலையில் திரண்டு வந்துள்ளனர். கால்வாய் அமைப்பதற்காக ஆற்றில் ஆங்காங்கே குழிதோண்டி இருப்பதனால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே ஆற்றில் குழி தோண்டிய ஒப்பந்தகாரரை கைது செய்ய வேண்டும். மேலும் உயிரிழந்த பள்ளி மாணவிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாசில்தார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.