தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ராஜிவ் ரஞ்சன் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமை செயலாளரான சண்முகத்தின் பதவி காலம் கடந்த ஆண்டு ஜூலை 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரது பதவி காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட நிலையில் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.