தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் பிப்ரவரி மாதம் முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு, தேர்வு அட்டவணை வெளியிடும் போது வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.