நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ . ‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
#Karnan is set to conquer the theatres all over the world from April 2021 @dhanushkraja @mari_selvaraj @Music_santhosh @KarnanTheMovie #KarnanArrivesOnApril pic.twitter.com/qmZ8ggNv7U
— Kalaippuli S Thanu (@theVcreations) January 31, 2021
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது . தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கர்ணன்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்ததோடு அட்டகாசமான போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளார் . இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.