சரியாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் பெண்கள் காலி குடங்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை 9 வது வாரம் உஜ்ஜி சாமி கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு கடந்த 25 நாட்களாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அங்கு வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் வழங்க வேண்டும் என அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததையடுத்து, சாலை மறியலை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.