Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன்… மருத்துவர்களுக்கு கொரோனா… கர்நாடகாவில் பரபரப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பூசி உலகின் பல பகுதிகளில் செலுத்தப்பட்டு வருவதைத்தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஐந்து மருத்துவர்களில் இருவருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், மூவருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஐந்து மருத்துவர்களுக்கும் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பும் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |