Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரவோடு இரவாக…. மர்ம நபர்களின் கைவரிசை… வலை வீசி தேடும் போலீசார்…!!

பேராசிரியையின் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்களிங்கபுரம் உச்சி சாமி கோவில் தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அவரின் தாயார் வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றதால், ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர்கள் வீட்டு சுற்று சுவர் வழியாக ஏறி குதித்த 2 மர்ம நபர்கள் ஜெயலெட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் 6 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு வெளியே செல்ல முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து மர்மநபர்களை சத்தம் கேட்டு எழுந்த ஜெயலட்சுமி அவர்களை பார்த்தவுடன் கத்தி கூச்சலிட்டார். ஆனால் அந்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இச்சம்பவம் குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அந்த வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |