பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கவுள்ளார் .
இந்தி திரையுலகில் நடிகை நிதி அகர்வால் முன்னா மைக்கேல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்திருந்தார் . ஆனால் இந்த படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை . இதன்பின் இவர் நடிப்பில் வெளியான ‘ஐஸ்மார்ட் சங்கர்’ படம் சூப்பர் ஹிட்டானது . இயக்குனர் புரி ஜெகநாதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ராம், நபா நடேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர் . இதை தொடர்ந்து நடிகை நிதி அகர்வால் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவியின் ‘பூமி’ ஆகிய படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார் . பொங்கல் தினத்தில் வெளியான இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் 27வது படத்தில் கதாநாயகியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கவுள்ளார் . தெலுங்கு, கன்னடம், தமிழ் ,மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாக இருக்கிறது . வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்குகிறார் . இந்த படத்தை ஏ. எம். ரத்னம் தயாரிக்கிறார் . விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.