Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. மாணவர்களுக்கு இனி இதுவும் இலவசம் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

இனி பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று படிப்படியாக குறைந்த நிலையில்  10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறகாத நிலையிலும் சீருடைகள், சத்துணவு, புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. மேலும் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிக்கூடம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம்  உயர்த்தப்பட்டபோது நடந்த நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்படுவது போல இலவச ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |