காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் அருகே 155 அடி உயர மலையிலிருந்து கண்ணை கட்டிக் கொண்டு கீழே இறங்கி வங்கி ஊழியர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த எஸ். வி.ரமணா தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அதிகளவில் ராணுவத்தில் இளைஞர்கள் சேர முன்வர வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தியும், எஸ்.வி.ரமணா மணிமங்கலம் அருகே உள்ள 155 அடி மலைக்குன்றில் இருந்து தன் கண்களை கட்டிக் கொண்டு மேலிருந்து கீழே இறங்கி சாகசம் செய்தார். இவருடைய சாதனை சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவு பேசப்பட்டு வருகிறது. அப்பகுதி கிராம மக்கள் அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.