பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்றபோது அவர் சென்ற காரின் அதிமுக கட்சி கொடி இருந்தது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி, சிஆர் சரஸ்வதி கூறுகையில்,சசிகலா தான் பொதுச் செயலாளர் என்ற வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றது, அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. அண்ணா திமுகவின் சட்ட விதிகளின்படி பொதுச் செயலாளருக்கு தான் எல்லா உரிமையும் உண்டு.
ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் எல்லாம் இவர்களே உருவாக்கிக் கொண்டது, அதிமுகவின் விதிகளில் அது கிடையாது. தொண்டர்களை பொறுத்தவரை நிச்சயமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா தான். சசிகலாவால் பதவியில் உட்கார்ந்தவர்கள் பேசலாம் . ஆனால் இயக்கத்திற்கு முக்கியம் தொண்டர்கள் தான்.பதவியில் இருப்பவர்கள் முக்கியமல்ல, தொண்டர்கள் தான் எல்லாமே.
இன்று எல்லா இடத்திலும் இருக்க கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் போஸ்ட் ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை அம்மாவிற்கு பிறகு அண்ணா திமுக வின் பொதுச் செயலாளர் சசிகலாதான் என்தில் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் அதிமுக கொடியை கட்டி செல்ல எல்லா உரிமையும் எங்களுக்கு உண்டு.
சின்னம்மா முடிவை விரைவில் அறிவிப்பார்கள். அதிமுகவை சின்னம்மா நம்பிக்கையோடு கொடுத்தாங்க, கொடுத்துட்டுப் போனாங்க. அது மக்களுக்கும் தெரியும், தொண்டர்களுக்கும் தெரியும். அண்ணா திமுக தொண்டர்களுக்கு தெரியும். நிச்சயமாக அண்ணா திமுக எங்களின் சின்னம்மா இடத்தில் வரும் இது காலத்தின் கட்டாயம் என தெரிவித்தார்.