Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 1 முதல்…. “திரையரங்குகளில் 100% அனுமதி”….. வெளியான அறிவிப்பு…!!

கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவிவருகிறது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அரசு ஒவ்வொரு தளர்வுகளாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 1 முதல் சில தளர்வுகளுடனான ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பிப்ரவரி 1 முதல் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது கொரோனா பரவல் காரணமாக 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.

திரையரங்குகளில் கட்டாயம் அனைவரும் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும். மேலும் பொது இடங்களில், அரங்குகளில் இருக்கும் போது 6 அடி தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்திருக்கவேண்டும். எச்சில் துப்புவது கட்டாயமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

Categories

Tech |