கர்ப்பிணியான 16 வயது சிறுமி தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி பக்கம் கீரப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் சென்னையைச் சேர்ந்த ராஜன் என்பவரை 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதமாக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார்.
இதனால் உடல் கருகி பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்து வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் எதற்காக தீ வைத்துக் கொண்டார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.