Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் தேர்வில்…. காப்பியா அடிக்கிறீங்க…? பள்ளிகள் போட்ட மாஸ்டர் பிளான்…!!

ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்க்க சில பள்ளிகளில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் வழியாகவே தேர்வு எழுதும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய மாணவர்களை தேர்வில் காப்பி அடித்தல், பெற்றோர் அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை தவிர்க்கும் வகையில் கொல்கத்தா நகரில் உள்ள ஒரு பள்ளியில் புதிய நடைமுறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி மொத்த மதிப்பெண்களில் 50% நேரடியான முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

கேள்வித்தாள் வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது கேள்விகளை நேரடியாக பதிலளிக்கும் வகையில் இருக்காது. கேள்விகளை புரிந்து கொண்டு அதன் லாஜிக் என்ன என்று யோசித்து கணக்கு போட்டால் மட்டுமே பதில் அளிக்கமுடியும். எந்த இரு விடைகளும் ஒரே மாதிரி இருக்காது. விடைகளை எப்படி கொண்டு வந்தார்கள்? என்பதுதான் மதிப்பெண்ணை தீர்மானிக்கும். பெற்றோர்களிடம் பேசி அவர்களையும் தேர்வின் கண்காணிப்பாளர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்று சில பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த முடியும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |