ஐரோப்பாவில் நான்காம் நாடாக போர்ச்சுக்கல் நாட்டில் கருணை கொலை சட்டமாக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் நாடானது கருணை கொலைகளுக்கு அனுமதி அளித்து அதனை சட்டமாக்கியுள்ளது. இதன்மூலம் ஐரோப்பாவிலேயே கருணைக்கொலையை சட்டமாக்கிய நாடுகளில் நான்காவது நாடு ஆகியுள்ளது. இது குறித்த வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. எனினும் ஜனாதிபதி Marcelo Rebelo Sousaவின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஜனாதிபதி Marcelo கத்தோலிக்க மதத்தில் தீவிர நம்பிக்கை உடையவர் என்பதால் இந்த சட்டத்தை அனுமதிப்பாரா? என்ற சந்தேகம் இருந்தது. மேலும் ஜனாதிபதிக்கு இது போன்ற சட்டங்களை நிராகரிக்க அல்லது அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ய உரிமை உள்ளது. மேலும் சோசலிஸ்ட் கட்சி ஆண்டு வருவதால் அதன் உறுப்பினர்கள் தங்களின் வாக்குகளை அளிக்க உரிமை கொடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து 136க்கு 78 வாக்குகள் என்ற நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி இச்சட்டத்திற்கு தடை விதித்தாலும், மற்றொரு வாக்கெடுப்பின் மூலமாக அவரது முடிவை மாற்றியமைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சோசலிஸ்ட் கட்சியின் எம்.பியான இசபெல் மொரேரா என்பவர் கூறியுள்ளதாவது, ஒவ்வொரு தனி மனிதரும் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை மற்றும் முடிவுகளை கூற உரிமை உண்டு என்று கூறியுள்ளார். மேலும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது வரை பெல்ஜியம் நெதர்லாந்து லக்சம்பேர்க் போன்ற நாடுகளில் மட்டும்தான் கருணைக்கொலை சட்டமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.