அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தான் எனவே அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நான்காண்டு கால சிறை தண்டனை முடிந்து கடந்த 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து அவர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய உடல்நிலை இயல்பாக இருப்பதால் தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.
12 மணி அளவில் அவர் டிசார்ஜ் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் பெங்களூரு புறநகர் பகுதிகளில் தேவனஹல்லி உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாதான். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்பதால் தான் அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டத. சசிகலா காரில் அதிமுக கொடி பொறுத்த எல்லா உரிமையும் உள்ளது. அதில் எந்த சர்ச்சையும் இல்லை அதிமுகவை மீட்கவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.