Categories
தேசிய செய்திகள்

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை… போலீஸ்க்கு கிடைத்த 1700 வீடியோக்கள்…!!

டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 1700 வீடியோக்கள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் ஜனவரி- 26 குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி நாட்டையே உலுக்கியது. மாபெரும் கூட்டமாக செங்கோட்டைக்கு சென்ற விவசாயிகள் அங்கிருந்த கம்பத்தில் ஏறி சீக்கியர்களின் கால்சா என்ற கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு வன்முறை வெடித்தது. அதற்கு பிறகு துணை இராணுவப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு வன்முறை கட்டுபடுத்தப்பட்டது .

இந்த வன்முறையில்  அங்கு பணியிலிருந்த 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தாக்கப்பட்டனர். மேலும்  இச்சம்பவம் தொடர்பாக போராட்டக்காரர்களின் மீது 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் இதுவரை 84 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று  டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு தடவியல் குழுவினர் செங்கோட்டை பகுதியில் ஆய்வு நடத்தினர்.

இதற்கிடையே வன்முறை தொடர்பான 1700 வீடியோக்கள், மற்றும் கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் பொதுமக்களிடம் இருந்து டெல்லி மத்திய பிரிவு காவல் துறையினருக்கு ஆதாரமாக கிடைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |