உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நித்யாமேனனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை நித்யா மேனன் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . இவர் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் . தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் .
இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ,இந்தி, மலையாளம் ,கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . இந்நிலையில் நடிகை நித்யா மேனன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.