Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகை திருப்ப வைத்திருந்த பணம்…. பஸ்ஸில் ஆட்டைய போட்ட நபர்…. போலீஸ் விசாரணை…!!

பெண் ஒருவர் நகைகளை திருப்புவதற்காக வைத்திருந்த பணம் காணாமல் போயுள்ளது குறித்து போலீசார் விட்ஸப்கார்னை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பக்கத்தில் உள்ள கடுக்கை வலசை பகுதியைச் சேர்ந்த ராக்கு என்பவருடைய மனைவி பாக்கியவடிவு (65). இவர் சம்பவத்தன்று ராமநாதபுரத்தில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பையில்  வைத்துக்கொண்டு உச்சிப்புளியில் இருந்து காலை மதுரை செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.

இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இறங்கி உள்ளார். பின்னர் தான் வைத்திருந்த பையை பார்த்தபோது அதில் பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து பாக்கியவடிவு கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |