அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று கூறி டிடிவி தினகரன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதற்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வெளியே வந்துள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லாத சசிகலா எவ்வாறு கொடியை பயன்படுத்தலாம் என்று கடுமையாக கூறினார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாதான். அதனால்தான் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுக்க தான் அமமுக தொடங்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் பிப்ரவரி 7ஆம் தேதி .சசிகலா தமிழகம் வருகிறார் என்று தெரிவித்துள்ளார் இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.