Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பப்ஜி விளையாட்டு வெறி…. தற்கொலை செய்துகொண்ட மாணவன்…. ஓசூரில் சோகம்…!!

பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் வீடுகளில் உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடப்பதன் காரணமாக மாணவர்களிடம் செல்போன் இருப்பதால் பப்ஜி என்ற விளையாட்டுக்கு  அடிமையாகியுள்ளனர். பெரியோர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டதை போல சிறுவர்கள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் பலர் உயிரிழந்து வருவது வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியை சேர்ந்தவர் வாய் பேச முடியாத ஜெயலட்சுமி. இவருக்கு கணவன் இல்லாததால் இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய இளைய மகன் ரவி. இவர் அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் ஜெயலஷ்மி வேளைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது ரவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |