Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி எம்ஜிஆரை…. என்றைக்காவது பக்கத்தில் போய் பார்த்திருக்கிறாரா…? – ஸ்டாலின் விமர்சனம்…!!

எம்ஜியாரை பக்கத்தில் போய் பழனிசாமி என்றைக்காவது பார்த்துள்ளாரா? என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஸ்டாலின் அதிமுகவை நிராகரிப்போ,ம் விடியலை நோக்கி, என்று தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை பூந்தமல்லியில் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய போது, “ஆரணியில் இழப்பீடு கோரிய பெண்ணுக்கு கண்டிப்பாக உதவி தொகை கிடைக்க தீர்வுகாண திமுக நடவடிக்கை எடுத்தது. அதிமுக ஐடி திமுகவை குற்றம்சாட்டி தவறான தகவலை அளித்துள்ளது.

அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து நான் நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். பஅதேபோல அதிமுக இஐடி தை நிரூபிக்கத் தவறினால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். எம்ஜிஆர் என்னை நன்றாகப் படிக்கச் சொன்னார். ஒரு பெரியப்பாவாக எம்ஜிஆர் என்னை நன்றாக படிக்கவும், அரசியலில் ஈடுபடவும் என்னை அறிவுறுத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னைக்காவது எம்ஜிஆர் பக்கத்தில் சென்று பார்த்திருக்கிறாரா? ரயில் என்ஜின் திருடியவனை விட்டுவிட்டு , கறி திருடியவர் மீது ஆட்சி இது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |