பிரபல தமிழ் நடிகர் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு இயக்குனர் முதல் வேலையாட்கள் வரை அனைவரும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் கடின உழைப்பிற்கு பிறகு ஒரு படம் முழுமையாக எடுக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு எடுக்கப்படும் ஒவ்வொரு படமும் திரைக்கு வரும்போதுதான் அந்த படத்தின் வெற்றி இருக்கிறது. ஆனால் படங்கள் வெளிவந்த உடனே ஓடிடி தளத்தில் வெளியாவதால் பெரும் இழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் மாதம் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது தெரிகிறது. சூர்யா ஜெயம் ரவியை தொடர்ந்து அடுத்த பெரிய நடிகரின் திரைப்படம் இப்படி வெளியாக இருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.