புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வடமாநில வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் தெற்கு போலீசாருக்கு வெள்ளியங்காடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள ஒரு குடோனில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் 25 கிலோ புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வடமாநில வாலிபர் ஒருவரை கைது செய்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் துணி கடை நடத்துவது போல புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.