கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி சிலர் உயிரை பறிகொடுத்துள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுகளில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்த விளையாட்டு பப்ஜி.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாய் பேச முடியாத தாய் ஜெயலட்சுமி, கணவரை இழந்த நிலையில் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மகன் ரவி அடிக்கடி பப்ஜி விளையாடி வந்துள்ளார். இதனை தாய் கண்டித்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.