தமிழகத்தில் நாளை முதல் 24 மணி நேரமும் பெட்ரோல் பங்குகள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மக்கள் அனைவரும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இருந்தாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில இன்னும் அமலில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் பெட்ரோல் பங்குகள் நேரக் கட்டுப்பாடு இன்றி 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், 100% இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.