நபர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு பொம்மையை வாங்கி திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹாங்ஹாங்க் நகரை சேர்ந்தவர் ஷி டியோரெங். இவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய பெற்றோர் அவருக்கு பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவர் தனக்கு பெண் பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து தனது பெற்றோர் ஆச்சர்யப்படும் விதமாக மொச்சி என்ற பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த பொம்மைக்கு அவர் பரிசாக விலையுயர்ந்த 10 ஜோடி ஷூக்கள், ஆடைகள், ஐபோன்கள் போன்ற பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் க்கூறுகையில், பத்து வருடங்களுக்கு முன்பு இந்த பொம்மையின் விலை ரூ.10 லட்சம் என்பதால் வாங்க முடியவில்லை. 2019ஆம் வருடம் ஆன்லைனில் இந்த பொம்மையை ஒரு லட்சம் என்பதால் வாங்கி வைத்து திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.