கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வயலூரில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்துவருகிறார். இவர் திடீரென காணாமல் போனதால் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு உள்ள அனைத்து இடங்களிலும் கோவிந்தம்மாளை தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் கோவிந்தம்மாள் அவரது ஊரின் அருகில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மிதந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து மூதாட்டி இறந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.