Categories
உலக செய்திகள்

நேரலை நிகழ்ச்சியில்…. தாயை தேடி வந்து காலை பிடித்த குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நேரலையில் செய்தியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த போது தாயை தன குழந்தை தேடி வந்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியின் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் லெஸ்ஸி லோபஸ். இவர் கொரோனா சூழல் காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தினமும் இரவு நேரத்தில் மாநில வானிலை அறிக்கையை தொகுத்து வழங்குவது இவருடைய வேலையாகும். இந்நிலையில் இரவு நேர ஒளிபரப்பின் போது வானிலை முன்னறிவிப்பை தொகுத்து வழங்கி கொண்டிருந்துள்ளார்.

அப்போது வானிலை அவருடைய 10 மாத குழந்தை தவழ்ந்து வந்த படியே தாயை தேடி வந்து காலை பிடித்து எழுந்து நிற்க முயற்சித்துள்ளது. இந்த சூழ்நிலையை சமாளித்து கொண்டு தன்னுடைய மகனை தூக்கி வைத்துக்கொண்டு வானிலை அறிக்கையை முடிவு செய்துள்ளார். மேலும் தன் மகனை தேடி வந்து விட்டதாகவும் அதில் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |