Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசையும், பாஜகவையும் எதிர்த்து போட்டியிட திட்டம்…? – எல்ஜேபி கட்சியின் பொது செயலாளர்…!!

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் அசாமின் அனைத்து தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்காளத்திலும் சர்பானந்த சோனாவால் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்திலும் நடப்பு ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும்  ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி(LJP) போட்டியிட முடிவெடுத்துள்ளது.

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் LJP கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் காலிக் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது “சட்டப்பேரவை தேர்தல்  நடைபெற உள்ள மேற்குவங்கம், அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர் பதவியில் இருக்கும் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் கட்சி தலைவர்கள் இரண்டு மாநிலங்களிலும் உள்ள எல்லா தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த விருப்பம் குறித்து கட்சியின் தலைவர் சிராஜ் பஸ்வான் முடிவெடுப்பார்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |