Categories
தேசிய செய்திகள்

நாளை (பிப்ரவரி-1) முதல்…. இதெல்லாம் மாற போகுது…. என்னனு தெரிஞ்சிக்கோங்க…!!

நாளை முதல் என்னென்னெ விதிமுறைகள் மாற் இருக்கின்றன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் அரசு பலவகையான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய பல்வேறு விதிமுறைகளை பிப்ரவரி 1-ம் தேதி(நாளை) முதல் அமலுக்கு வருகின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.

சமையல் எரிவாயு:

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றப்படும். அதன்படி நாளை கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும்.

பட்ஜெட் 2021:

மத்திய பட்ஜெட்-2021 நாளை தாக்கல் செய்யப்படுகிறது. கொரோனா நெருக்கடியில் முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இந்த பட்ஜெட் மூலமாக மக்களுக்கு கொரோனா  நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஸ்டேக்:

நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. M மற்றும் N வாகனங்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில சுங்க சாவடிகளில் இன்னமும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பிப்-15 முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்மில் பணம் எடுத்தல்:

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் Non-EMV ரக ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

EPFO:

​கொரோனா காலகட்டத்தில் முதியோரின் பாதுகாப்பு கருதி பென்சன் வாங்கும் ஓய்வூதியர்கள் தங்களது ஜீவன் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி-28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக EPFO அறிவித்துள்ளது.

விமான சேவை:

நாளை முதல் புதிய வெளிநாட்டு வழித்தடங்களில் விமானங்களை இயக்கப்போவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |