Categories
தேசிய செய்திகள்

“கண்ணீரில் நனையும் பீகார்” மூளை காய்ச்சல் பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு…!!

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.  

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு,முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர்.

Image result for The number of children who have died of brain fever in Bihar has risen to 141.

இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு வரையில் பள்ளிகளுக்கு 22-ம் தேதி வரையிலும், மேல் நிலை பள்ளிகளுக்கு காலை 10:30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இக்காய்ச்சலால் பீகாரில் 18 மாவட்டங்கள்  பாதிக்கப்பட்டுள்ளது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்காய்ச்சலால் குழந்தைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.
Image result for The number of children who have died of brain fever in Bihar has risen to 141.
 மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும்  மருத்துவமனையில் ஆய்வு செய்தார். மருத்துவர்களுடனும் ஆலோசனை நடத்தினார். நேற்று சுகாதாரத்துறை மத்திய கூடுதல் செயலாளர் மனோஜ் ஜலானி தலைமையிலான குழுவினரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் மூளைகாய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |