Categories
செய்திகள் மாநில செய்திகள்

நாங்களும் ஓட்டு போடணும்…! அமைச்சு கொடுங்க ஐயா… ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் …!!

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கக்கூடிய நிலையில் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி மாயன் கூறுகையில், தேர்தல் முடிந்த மறு நாளோ அல்லது தேர்தல் தொடங்குவதற்கு ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பாகவோ சில சிறப்பு மையங்கள் அமைத்து அங்கு தேர்தல் பணியில் ஈடுபட கூடியவர்களுக்கு அந்த வாக்குச்சீட்டுகளை அளித்தோ அல்லது வாக்கு மெஷினை பயன்படுத்தி கூட வாக்கு உரிமையை அவர்கள் செலுத்துவார்கள் அந்த முறையை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையருக்கு முன் வைக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |