Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் 25 கிலோ குட்கா பறிமுதல்…. வடமாநில வாலிபர் கைது…!!

குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூரில் 25 கிலோ குட்கா போதைப் பொருட்களை காவல்துறையினர் வடமாநில வாலிபர்கள் இடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் தெற்கு காவல் துறைக்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைதையடுத்து காவல்துறையின் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் 25 கிலோ புகையிலை பொருட்களுக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த வடமாநில வாலிபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |