மூதாட்டியின் காதை அறுத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் தந்தையான சேது ராமலிங்கம் இறந்துவிட்டதால், இவரின் தாயார் மனோன்மணி ராமசாமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மனோன்மணியின் இரண்டு காதுகளையும் அறுத்து அவர் அணிந்திருந்த கம்மலை திருடி விட்டு சென்றனர். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய போட்ட மனோன்மணியின் சத்தத்தை கேட்டு, அவரது மகன் ராமசாமி எழுந்து ஓடி வந்துள்ளார்.
ஆனால் மர்ம நபர்கள் அதற்குள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனையடுத்து காயமடைந்த மனோன்மணியை சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மூதாட்டியின் காதை அறுத்து 1 லட்சம் மதிப்புள்ள 3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.