பஞ்சாபில் 4 -வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.
பஞ்சாப்பின் சங்கத் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் பக்கத்து வீட்டில் வசித்துவரும் 4-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சிறுமியின் தாயார் பேசியதில், தனது மகளை பக்கத்து வீட்டு சிறுவன் விளையாட அழைத்து சென்றதாகவும், நீண்ட நேரமாகியும் மகள் வீட்டுக்கு வராததாகவும் தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். அருகிலிருந்தவர்கள் அச்சிறுவனை மீட்டு ஹரியானாவில் உள்ள டப்வாலி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்ததையடுத்து சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி பகிந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.