தமிழகத்தில் அதிமுக அரசால் அமைக்கப்பட்டு வரும் அம்மா மினி கிளினிக் அலங்கோலமாக உள்ளது என கமல் ஹாசன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு மத்தியில் தேர்தல் நெருங்கிகொண்டு இருப்பதால் அதிமுக பல்வேறு நலத்திட்டங்களை இப்போது இருந்தே செய்யத் தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் அதிமுக அரசால் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டு வருகிறது. கரூரில் நேற்று அம்மா மினி கிளினிக் பிறப்பின்போது சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து கமல் ஹாசன் ட்விட்டரில் விமர்சித்து தனது பாணியில் எழுதியுள்ளார். அள்ளித் தெளிக்கும் அவசர கோலத்தால் ஏற்படும் அலங்கோலம் தானே இது? என விமர்சித்துள்ளார்.