Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் பிப்ரவரி 5 வரை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பிப்ரவரி 1 முதல் 5ஆம் தேதி வரை தங்க பத்திர விற்பனை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 2020-2021 ஆம் நிதியாண்டுக்கான 11ஆவது கட்ட தங்க பத்திர விற்பனை பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தங்கப் பாத்திரத்தில் விலை கிராமுக்கு ரூ.4,912 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தின சராசரி விலையை அடிப்படையாக வைத்தே இந்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தங்க பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்த டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் ஒரு கிராமுக்கு ஐம்பது ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். அதனால் தங்க பத்திரம் வாங்க விரும்புபவர்கள் ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள். அதற்கான தள்ளுபடி உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும்.

Categories

Tech |